அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் காதலன் கண்முன்னே மற்றொரு நபருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற ...
அமெரிக்காவில் பெண் ஒருவர் தன் காதலன் கண்முன்னே மற்றொரு நபருக்கு முத்தம் கொடுத்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவில் மிகவும் புகழ்பெற்ற விளையாட்டுகள் பேஸ்பாலும், பேஸ்கட்பாலும். கிட்டத்தட்ட 80 சதவிகித மக்கள் அடிமையாக உள்ளனர், எனவே இந்த விளையாட்டு மைதானங்கள் வார இறுதி நாட்களில் நிரம்பி வழியும். போட்டிகளின் ஓய்வு நிமிடங்களில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்து போட்டியினை பார்க்கும் யாராவது ஓர் இளம் ஜோடியை மைதானத்திலுள்ள பெரிய திரையில் ஒளிபரப்புவார்கள். இதற்கு 'கிஸ் கேம்'(KISS CAM) என்று பெயர். அமெரிக்காவின் நியூயோர்க்கில்(Newyork) நேற்று முன்தினம் போட்டிகள் நடந்து கொண்டிருந்தது. அப்போது, இளம் ஜோடியை திரையில் காட்டினர், காதலன் போட்டியை தனது கைப்பேசியில் ரெக்கார்ட் செய்து கொண்டிருந்தார். திரையில் தோன்றுவதை காதலி சுட்டிக் காட்டியும், கண்டுகொள்ளாமல் தனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த காதலி, அருகில் இருந்த வேறொரு நபருக்கு முத்தம் கொடுக்கவே அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
Click here to play this video
COMMENTS