தாயின் கருவறையில் இருந்து பிரசவிக்கும் குழந்தையின் தலை நிற்பதற்கே 3 மாதங்கள் ஆகும் நிலையில், லண்டனில் ஒரு குழந்தை தாயின் கருவறையில் இருக்க...
தாயின் கருவறையில் இருந்து பிரசவிக்கும் குழந்தையின் தலை நிற்பதற்கே 3 மாதங்கள் ஆகும் நிலையில், லண்டனில் ஒரு குழந்தை தாயின் கருவறையில் இருக்கும் போதே கை தட்டிய வீடியோ அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழத்தியுள்ளது.
பிரிட்டனில் வசிக்கும் Jen Cardinal, தனது கணவருடன் சேர்ந்து, தான் வயிற்றில் சுமந்து வரும் 14 வார குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடியுள்ளனர்.
அந்த பாட்டிற்கு ஏற்றவாறு குழந்தை கர்ப்பப்பைக்குள் அழகாக கை தட்டும் காட்சிகள், அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் காட்சிகள் மூலம் மருத்துவர்களால் படம்பிடிக்கப்பட்டன.
இந்த காட்சிகளை Jen Cardinal-லின் கணவர் காணொளியாக பதிவு செய்துள்ளார். குழந்தை கை தட்டும் காட்சிகளை ரீவைன்ட் செய்து பார்த்த தாயும், தந்தையும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இது குறித்து தாய் Jen கூறுகையில், இந்த அனுபவத்தை என்னால் ஒரு போதும் மறக்க முடியாது. எனது குழந்தை மூன்று முறை கை தட்டியது. இது போன்ற செயல் மர்மமானது அல்ல. இது ஆச்சரியமான நிகழ்வு என கூறியுள்ளார்.
மழலையர் பாடலுக்கு தனது குழந்தை கை தட்டும் 15 வினாடி காட்சிகளை யூ டியூபில் ஜென் வெளியிட்ட, ஒரே நாளில் மட்டும் அந்த வீடியோவை 48000 பேர் பார்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வீடியோ உங்கள் பார்வைக்கும் இதோ...

Click here to play this video
COMMENTS